Advertisment

'உயர்வாகத்தான் பேசினேன்'-நடிகர் மன்சூர் அலிகான் விளக்கம்  

actor Mansoor Ali Khan explains

Advertisment

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் தயாரிப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 19 ஆம் தேதி வெளியான படம் லியோ. பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்து வருகிறது.

இதனிடையே, இப்படத்தில் நடித்த நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய போது, நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதற்கு நடிகை திரிஷா, மன்சூர் அலிகானுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “சமீபத்தில் மன்சூர் அலிகான் என்னை பற்றி கேவலமாக பேசிய ஒரு வீடியோ எனது கவனத்திற்கு வந்தது. இதை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். மேலும், இது பாலியல் அவமரியாதை, பெண்வெறுப்பு மற்றும் அவரது மோசமான மனநிலையை நான் காண்கிறேன். அவருடன் அந்த படத்தில் சேர்ந்து நடிக்காததற்கு மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இனிமேலும், இது போன்று நடக்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன். இவர் போன்றவர்கள் மனித குலத்திற்கே கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

தொடர்ந்து நடிகை திரிஷாவிற்கு ஆதரவாக பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவுகள் குரல்கள் எழுந்து வருகிறது. நடிகை குஷ்பு ஆகியோர் நடிகர் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நடிகை திரிஷாவை பற்றி உயர்வாகத்தான் பேசினேன் என நடிகர் மன்சூர் அலிகான் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள விளக்கத்தில் 'நான் எப்பொழுதும் என்னுடன் நடிக்கும் சக நடிகைகளுக்கு மரியாதை கொடுப்பவன். நான் பேசியதை திட்டமிட்டே வேறு மாதிரி கட் செய்து தவறாக பரப்புகின்றனர். நடிகை திரிஷாவை பற்றி உயர்வாகத்தான் பேசினேன்' என தெரிவித்துள்ளார்.

trisha
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe