Advertisment

நடிகர் கிருஷ்ணாவை சிறையில் அடைக்க உத்தரவு!

actor-krishna-1

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருந்தது. இதில் நடிகர் கிருஷ்ணாவுக்கும் தொடர்பிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனையடுத்து அவரை பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது. இத்தகைய சூழலில் தான் நடிகர் கிருஷ்ணா நேற்று (25.06.2025) 2 மணியளவில் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் ஆஜரானார். சுமார் 22 மணி நேரத்திற்கு மேலாக அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்றது. அதோடு அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இருப்பினும் அவரது வீட்டில் எந்தவிதமான ஆவணங்களும், போதைப்பொருளும் சிக்கவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

Advertisment

அதற்கு அடுத்தபடியாக நடிகர் கிருஷ்ணாவின் சமூக வலைத்தள கணக்குகள் மற்றும் வாட்ஸ் அப் சாட் உள்ளிட்டவற்றை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் நடிகர் கிருஷ்ணா ஒரு குறிப்பிட்ட ‘கோட் வேர்ட்’ மூலம் நண்பர்களுக்குள்  பேசி கொண்டது தொடர்பான மெசேஜ்கள் அழிக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர். அதோடு சென்னையைச் சேர்ந்த கெவின் என்ற நபரிடம் வாட்ஸ் அப்பில் உரையாடல் செய்ததாகவும், அதில் சில கோட் வேர்டுகளை பயன்படுத்திப் பேசியதாகவும் கூறப்பட்டது. அதாவது கடந்த 2020ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்த வாட்ஸ் அப் உரையாடல்களைக் கிருஷ்ணா அழித்திருக்கிறார். அவற்றை மீண்டும் மீட்டெடுத்து போலீசார் சோதனை செய்ததில் நடிகர் கிருஷ்ணா தொடர்ச்சியாக கெவின் என்ற நபரிடம் போதைப்பொருளை வாங்கியதை காவல்துறையினர் உறுதி செய்தனர். அதன் அடிப்படையில்  கிருஷ்ணா மற்றும் கெவின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Advertisment

அதே சமயம் கெவின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் பின்னர் கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற மருத்துவ பரிசோதனை செய்தனர். இந்நிலையில் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் கிருஷ்ணா மற்றும் அவரது நண்பர் கெவின் ஆகிய இருவரையும் நுங்கம்பாக்கம் போலீசார் எழும்பூர் பகுதியில் உள்ள நீதிபதி குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள எழும்பூர் 14வது பெருநகர குற்றவியல் நீதிமன்ற நடுவர் தயாளன் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தினர். அப்போது அவர் இருவரையும் வரும் ஜூலை மாதம் 10ஆம் தேதி (10.07.2025) வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து இருவரையும் புழல் சிறைக்கு போலீசார் அழைத்துச் சென்று அடைக்க உள்ளனர்.

Actor krishna Chennai police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe