நடிகர் கருணாஸ் கைது...

KARUNAS

தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனு தாக்கல் என அனைத்தும் முடிந்து சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.இது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம்தேர்தல்நடத்தை வழிமுறைகள் அமலில்இருப்பதால், தேர்தல் பறக்கும் படையினர்தீவிரவாகனசோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சிவகங்கையில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருப்புக்கொடி காட்ட திட்டமிட்டிருந்ததாக முக்குலத்தோர் புலிப்படை அமைப்பினைச் சேர்ந்த கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

arrest karunas
இதையும் படியுங்கள்
Subscribe