ADVERTISEMENT

நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார்! - மோடியை விமர்சித்த கமல்!

10:40 PM Apr 03, 2020 | Anonymous (not verified)

பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன், ஆனால் நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே, அவர் இன்றுதான் வருகிறார் என்று, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மோடியை விமர்சனம் செய்துள்ளார்.

ADVERTISEMENT



உலகையே புரட்டிப் போட்டுள்ள கரோனா வைரசால் 204 நாடுகளில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53,000-ஐ கடந்துள்ளது. இந்தியாவிலும் தற்போது வேகமாகப் பரவிவரும் இந்த கரோனா வைரஸ் 2500க்கும் மேற்பட்டோரைப் பாதித்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை மக்கள் முன் உரையாற்றிய பிரதமர் மோடி, வரும் ஐந்தாம் தேதி இரவு ஒன்பது மணிக்கு மக்கள் அனைவரையும் ஒன்பது நிமிடங்கள் லைட்களை அணைக்க சொல்லிவிட்டு விளக்கு ஏற்ற சொன்னார். ஏற்கனவே கடந்த வாரம் மக்கள் அனைவரும் வீதிகளில் நின்று கைதட்டிய சூழலில், பிரதமர் தற்போது விளக்கேற்றும் படி கூறியுள்ளார்.

ADVERTISEMENT



இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் "பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன். பாதுகாப்புக்கவசங்கள் தட்டுப்பாடுக்கான தீர்வு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி விநியோகம், ஏழைமக்களின் வாழ்வாதாரம், வருங்கால பொருளாதார நடவடிக்கை என, ஆனால் நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார்" விமர்சனம் செய்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT