/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kamalhaasa43434.jpg)
லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள 'விக்ரம்' படம் இந்தியாவைத் தாண்டி உலக நாடுகளிலும் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்த படம் வசூலில் உலகம் முழுவதும் ரூபாய் 320கோடி வசூலித்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே கமல்ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றிக்காகலோகேஷ்கனகராஜ், உதவி இயக்குநர்கள்,சிறப்புத்தோற்றத்தில் நடித்த சூர்யாபோன்றோருக்குப்பரிசுகளை வழங்கி அன்பைப் பகிர்ந்தார்.
இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று (14/06/2022) நடிகர் கமல்ஹாசன் 'விக்ரம்' திரைப்படம் வெற்றி பெற்றதையொட்டி, சந்தித்துப் பேசினார். இந்த நிகழ்வின் போது, விக்ரம் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் ஆர் மகேந்திரன் உடனிருந்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)