Advertisment

நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்

Actor Junior Balayya passed away

Advertisment

பிரபல நடிகர் ஜூனியர் பாலையா(70) மூச்சுத்திணறல் காரணமாக இன்று மரணமடைந்துள்ளார்.

பிரபல நடிகர் டி.எஸ். பாலையாவின் மகனும், நடிகருமான ஜூனியர் பாலையா (எ) ரகு பாலையா தமிழில்கரகாட்டக்காரன், கோபுர வாசலிலே, சுந்தரகாண்டம், சாட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். குணச்சித்திரம், காமெடி என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கனகச்சிதமாக நடிக்கக் கூடியவர் ஜூனியர் பாலையா.

இந்த நிலையில், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்த ஜூனியர் பாலையா(70) இன்று மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்துள்ளார். வயது மூப்பின் காரணமாக அடிக்கடி மருத்துவச் சிகிச்சை எடுத்து வந்த நிலையில், தற்போது அவர் உயிரிழந்துள்ளது திரையுலகினர் மத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

actor
இதையும் படியுங்கள்
Subscribe