Advertisment

ஜே.கே.ரித்திஷின் உடல் நாளை நல்லடக்கம்

நடிகரும், முன்னாள் திமுக எம்.பியுமான ஜே.கே.ரித்திஷ் (வயது 46) இன்று மாலையில் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். கேணிக்கரை மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது. அவரது உடல் ராமநாதபுரம் அண்ணாநகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அதிமுக எம்.பி. அன்வர் ராஜா, முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள் தொடர்ந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Advertisment

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திரையுலகினரும் ரித்திஷின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ரித்திஷின் உடல் அவரது சொந்த ஊரான ராமநாதபுரம் மணக்குடியில் நாளை மாலை 5.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.

j

actor jk rithish passed away
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe