
நடிகர் கவுதம் கார்த்திக்கிடம் வழிப்பறி நடந்ததாக போலீசில் புகாரிளிக்கப்பட்டுள்ளது.
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிய, 'கடல்' படத்தின் மூலம் அறிமுகமானவர் கவுதம் கார்த்திக். இவர், நடிகர் கார்த்திக்கின் மகன் ஆவார். அவ்வப்போது கவுதம் கார்த்திக் சைக்கிளில் வெளியில் செல்வது வழக்கம். இந்நிலையில் சென்னை ஆழ்வார்ப்பேட்டை டி.டி.கே சாலையில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த கவுதம் கார்திக்கை, பின்தொடர்ந்த இருவர் அவரிடம் இருந்த செல்ஃபோனை வழிப்பறி செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, அவர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ள நிலையில், போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.