Advertisment

நடிகர் தனுஷின் மகனுக்கு அபராதம் 

 Actor Dhanush's son fined

Advertisment

பிரபல நடிகர் தனுஷின் மகன் வாகன விதிகளை மீறியதாகச் சென்னை போக்குவரத்து காவல்துறைஅபராதம் விதித்துள்ளது.

பிரபல நடிகர் தனுஷின் மூத்த மகன் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டியதாகப் புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து போக்குவரத்து விதிகளை மீறி இருசக்கர வாகனத்தை ஓட்டியதாக நடிகர் தனுஷின் மகனுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது சென்னை போக்குவரத்து காவல்துறை. தனுஷின் மூத்த மகன் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் இன்றி பயணிப்பது போன்ற வீடியோ காட்சி ஒன்று வெளியாகி இருந்த நிலையில், அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத்தகவல்கள் வெளியாகி உள்ளன.

தனுஷின் மூத்த மகன் 17 வயது சிறுவன் என்ற நிலையில், சிறுவனாக இருசக்கர வாகனத்தை இயக்கியதற்காகவும் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

DHANUSH actor
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe