/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a1621.jpg)
தனுஷ் - ஐஸ்வர்யா இருவருக்கும் 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி தனுஷும் ஐஸ்வர்யாவும் சேர்ந்து வாழ மனமில்லாமல் பிரிவதாக தங்களது சமூக வலைதளங்கள் மூலமாக அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
இதையடுத்து இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில் 2004ஆம் ஆண்டு நடந்த தங்களது திருமணத்தை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். இந்த மனு மூன்று முறை விசாரணைக்கு வந்த நிலையில் இரண்டு முறையும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஆஜராகவில்லை. இதனால் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
நான்காவது முறையாக இந்த வழக்கு சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.சுபா தேவி முன்பு கடந்த 21/11/2024 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தனுஷும் ஐஸ்வர்யாவும் நேரில் ஆஜராகினர். இருவரிடமும் நீதிமன்ற அறைக்குள் வைத்து ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. அப்போது நீதிபதி, “பிரிந்து செல்வதில் உறுதியாக இருக்கிறீர்களா” என்று இருவரிடமும் கேள்வி கேட்டார். அதற்கு, பிரிவதில் உறுதியாக இருக்கிறோம், இதில் எந்த மாற்றமும் இல்லை என இருவருமே பதிலளித்தனர். இதையடுத்து இந்த வழக்கில் 27 ஆம் தேதி தீர்ப்புவழங்கப்படும்என நீதிபதி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
இந்நிலையில் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோருக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் தற்பொழுது தீர்ப்பு வழங்கியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)