Advertisment

நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்

 Actor Delhi Ganesh passed away

நடிகர் டெல்லி கணேஷ் பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்தவர். ரஜினி, கமல் முதல் இன்றைய தலைமுறை முன்னணி ஹீரோக்களுடைய படங்களிலும் நடித்து புகழ் பெற்றவர். 80 வயதான நடிகர் டெல்லி கணேஷ் வயது மூப்பு காரணமாக அண்மைக்காலமாக அதிமாக படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தாலும் கடந்த வருடம் ஒரு சில படங்களில் நடித்திருந்தார்.

Advertisment

இந்தநிலையில் நேற்று இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது உறக்கத்திலேயே உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னை ராமாபுரத்தில் உள்ள இல்லத்தில் அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் பாலச்சந்தர் இயக்கத்தில் அறிமுகமான டெல்லி கணேஷ் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நகைச்சுவை வேடங்களிலும் நடித்து முத்திரை பதித்தவர். குறிப்பாக கமல்ஹாசன் திரைப்படங்களில் இவருக்கென ஒரு நகைச்சுவை கதாபாத்திரம் அமைந்திருக்கும். நடிகர் டெல்லி கணேஷின்மறைவு திரைத்துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe