Skip to main content

கடுமையான டாஸ்க்கால் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுகிறாரா சேரன்? அதிர்ச்சி தகவல்!

Published on 18/09/2019 | Edited on 18/09/2019

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 85 நாட்களுக்கு மேல் கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து தற்போது மூன்றாவது சீசன் நடைபெற்று கொண்டிருக்கிறது. இரண்டு சீசன்களை போலவே மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி, மதுமிதா மற்றும் கஸ்தூரி இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். இதனையடுத்து சேரன், ஷெரின், கவின், லாஸ்லியா, சாண்டி ஆகியோர் இந்தவாரம் எவிக்சன் லிஸ்டில் உள்ளனர்.
 

big boss



மேலும் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நடக்கும் டாஸ்க்குகளில் எந்த போட்டியாளர் வெற்றி பெறுகிறரோ அவர் நேரடியாக இறுதி சுற்றுக்கு செல்வார் என்றும் பிக் பாஸ்ஸில் கூறியுள்ளனர். இந்த டாஸ்க்குகளில் தர்ஷன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்படத்தக்கது. இந்த நிலையில் சாண்டி, தர்ஷன், முகேன் மற்றும் கவின் ஆகியோர் இளைஞர்கள் என்பதால் பிக் பாஸ் கொடுக்கும் கஷ்டமான டாஸ்குகளை சமாளித்து விளையாடி வருகின்றனர். இவர்களோடு ஒப்பிடும் போது சேரன் வயதில் மூத்தவராக இருப்பதால் கஷ்டமான டாஸ்குகளை சமாளிக்க முடியாமல் விளையாடி வருகிறார். இதனால் டாஸ்க்குகளை சமாளிக்க முடியாமல் சேரன் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் நேற்றைய போட்டியின் போது லாஸ்லியா மாற்று ஷெரினுக்கு காயம் ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த வாரம் வாக்குகளின் அடிப்படையில் பார்த்தால் தற்போது ஷெரின் மிகவும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளார். இதனால் இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என்று பொறுத்து இருந்து பார்க்கலாம்.

சார்ந்த செய்திகள்

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

நிஜ வாழ்க்கையில் நடந்த தனுஷ் படக் கதை - பகிர்ந்த நடிகர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kishen das got engaged to his best friend like in dhanush Thiruchitrambalam movie

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் கிஷன் தாஸ். அதில் சிறிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்த நிலையில், ஹீரோவாக ‘முதல் நீ முடிவும் நீ’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். பின்பு ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளியான சிங்கப்பூர் சலூன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்போது தருணம், ஈரப்பதம் காற்று மழை உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். 

இந்த நிலையில், கிஷன் தாஸுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதனைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்த அவர், “அவள் இல்லை என மறுக்கவில்லை. திருச்சிற்றம்பலம் படக் கதை என் நிஜ வாழ்க்கையில் நடந்துள்ளது. என் நெருங்கிய நண்பருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் நிச்சயதார்த்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். 

அவருக்கு தற்போது மஞ்சிமா மோகன், ஆத்மிகா, கௌரி கிஷன் உள்ளிட்ட பல்வேறு திரைப் பிரபலங்கள் கிஷன் தாஸ் பதிவிற்கு வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்துள்ளனர். மேலும் ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.