Advertisment

நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்

 Actor Bijili Ramesh passed away

சமூக வலைத்தள பேட்டி மூலம் பிரபலமாகி பின்னர் நடிகரானவர் பிஜிலி ரமேஷ். 2019 ஆம் ஆண்டு ஹிப் ஹாப் ஆதி நடித்த 'நட்பே துணை' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களிலும் நடித்து வந்தார். பொன்மகள் வந்தாள், ஆடை, கோமாளி உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தவர் திடீரென ஏற்பட்டஉடல் நலம் குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார்.

Advertisment

இந்நிலையில் பிஜிலி ரமேஷ் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நேற்று இரவு 9:00 மணிக்கு அவர் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இறுதிச் சடங்கு இன்று மாலை 5 மணிக்கு எம்ஜிஆர் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisment
bijiliramesh actor
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe