வேலூர் மாவட்டம்குடியாத்தம் பகுதியில் உள்ள கிரிக்கெட் வீரர்களைஒருங்கிணைந்து, குடியாத்தம் பிரீமியர் கிரிக்கெட் லீக் (GPCL) என்ற அமைப்பை தொடங்கி, இதில் 12 அணிகள் சேர்க்கப்பட்டு சுமார் 200 இளம் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று கடந்த மூன்று மாதங்களாக 75 போட்டிகள் நடைபெற்றது.
இதனையடுத்து இறுதிப் போட்டி நடைபெற்றது.வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சின்னத்திரை நடிகர் கே.பி.ஒய் பாலா செய்தியாளரிடம் பேசியபோது, மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னால் முடிந்தவற்றை உதவி செய்தேன். மற்றவர்கள் உதவி செய்யவில்லை எனக்கூறும் தகுதி எனக்கு இல்லை.
எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணமெல்லாம் இல்லை, எனக்கு எந்த கட்சியும் தெரியாது.எனக்கு தெரிந்த ஒரே கட்சி எனது தங்கச்சி எனக் கூறியவர். எனக்கு பொலிட்டிக்கல் மேப் வாங்க கூட தெரியாது.நான் எங்க இருந்து பொலிட்டிக்களில் வருவேன் என்றார்.