actor asked for help because he was suffering from poverty

வேலூர் கஸ்பா அம்பேத்கர் நகர் பகுதியில் வசித்து வருபவர் ஜாக்கி என்கின்ற ராஜா. வளர்ச்சி குறைபாட்டால் மூன்றை அடி உயரமுள்ள இவர் நடிகர் கமல்ஹாசன் உடன் சேர்ந்து அபூர்வ சகோதரர்கள், ஆர்யாவுடன் நான் கடவுள் உள்பட ஏராளமான படத்தில் நடித்திருக்கிறார். தற்போது 47 வயதாகும் இவருக்கு தாய் தந்தை இறந்துவிட்ட நிலையில் ஒரு தங்கச்சி மட்டுமே உறவு என்று இருக்கிறது. இவர் வாழ வழியின்றி ஏழ்மையில் தவித்து வருகிறார்.

Advertisment

இந்த நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்த நடிகர் ராஜா, “எனது தங்கச்சியும் வளர்ச்சி குறைபாடு ஆனவர். அவரும் என்னையே சார்ந்துள்ளார். அவரையும் நான்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். எங்களுக்கென யாரும் கிடையாது. சாலையில் நின்று கொண்டிருக்கும் போது ஒரு விபத்தில் இரண்டு கால்களும் அடிபட்டு நடக்க முடியாமல் போய்விட்டது. எனக்கென யாரும் இல்லை நான் இருக்கும் வரை உணவும் உடையும் இருந்தால் போதும் தன்னுடைய கால்களை சரி செய்ய மருத்துவ உதவி செய்யுங்கள்” என்று கோரிக்கை மனு வழங்கினார். இந்த மனு மீது நடவடிக்கை எடுப்பதாக அலுவலர்கள் கூறினர்.

Advertisment

actor asked for help because he was suffering from poverty

இதுகுறித்து ஜாக்கி என்கின்ற ராஜா கூறுவது, “நான் பல திரைப்படத்தில் முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். குறிப்பாக நடிகர் கமல்ஹாசன் உடன் சேர்ந்து அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடித்திருக்கிறேன். பல மேடை நிகழ்ச்சிகளில் நடனமாடி இருக்கிறேன். ஆனால் தற்போது எனக்கு வாழ வழியில்லாமல் நடுத்தெருவில் இருக்கிறேன். யாரையும் நேரில் சென்று பார்க்க முடியாமலும் இருக்கிறேன். ஆகவே எங்களுடைய நடிகர் சங்கத் தலைவர் விஷால் எனக்கு ஏதாவது உதவி செய்வார். ஆனால் என்னால் அவரைப் பார்க்கச் செல்ல முடியவில்லை” என வேதனையைத் தெரிவித்தார்.