actor arjun mother incident tamilnadu chief minister mkstalin condolence

Advertisment

தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மற்றும் தெலுங்கு என பல மொழிகளில்தொடர்ந்து நடித்து வரும் அர்ஜுன், மிகச்சிறந்த ஆக்‌ஷன் நாயகனாக இன்று வரை வலம் வந்துக் கொண்டிருக்கிறார். நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் தென்னிந்தியாவில் தனிப் பெயரைப் பெற்றவர் நடிகர் அர்ஜுன்.

இந்நிலையில், ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவம்மா (வயது 85) உடல் நலக்குறைவு காரணமாக, பெங்களூருவில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த சில தினங்களாக தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று (23/07/2022) காலமானார். கர்நாடக மாநிலம், மைசூரில் பள்ளி ஆசிரியையாகப் பணிபுரிந்த இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

லட்சுமி தேவம்மாவின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் அர்ஜுன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவி உடல்நலக் குறைவுக் காரணமாக, பெங்களூருவில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் இயற்கை எய்தினார் என்று அறிந்து மிகவும் துயருற்றேன்.

தாயாரின் இழப்பால் தவிக்கும் நடிகர் அர்ஜுன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.