பிரபல நடிகரும் இயக்குநருமான மனோபாலா நேற்று (03.05.2023) உடல்நலக்குறைவால் காலமான நிலையில் அவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி விஜயகாந்த், சீமான் என பல்வேறு அரசியல் தலைவர்களும் ரஜினி, கமல் தொடங்கி கார்த்தி, ஜெயம் ரவி என பல்வேறு திரை பிரபலங்களும் சமூக வலைத்தளம் வாயிலாக தங்களது இரங்கலைத் தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது மனோபாலாவின் இறுதி ஊர்வலம் தொடங்கிய நிலையில் இறுதி ஊர்வலத்தில் நிறைய திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மனோபாலாவிற்கு தங்களது இறுதி மரியாதையை செலுத்தினர்.