Advertisment

‘இப்படி ஒரு படத்தை இனி எடுப்பியா?’ -பார்த்திபனின் ‘ட்விட்டர்’ பரிதவிப்பு!

தன்னந்தனி ஆளாக மொத்தத் திரைப்படத்தையும் ஆக்கிரமித்து ஒத்தச் செருப்பை வெளியிட்டு சாதித்திருக்கிறார் பார்த்திபன். ஆனாலும், அந்தப் படம் நெடுகிலும் வாக்குமூலம் என்ற பெயரில் புலம்பியதைப் போலவே, நிஜத்திலும் புலம்பி வருகிறார். ஆம். அவரது ட்விட்டர் புலம்பல் இது ‘இப்படிப்பட்ட படத்தையும் ஈவு இரக்கம் இல்லாமல் கழிவிரக்கம் செய்து போடுவதும், பார்ப்பதும் அருவருப்பான செயல்! ஒத்த செருப்பு பத்தாது ரெண்டு செருப்பாலயும் அடிக்கனும் என் 7-அம் அறிவை! இப்படி ஒரு படத்தை இனி எடுப்பியான்னு! Theatre-ல் கிடைக்கும் வரவேற்புக்கு இன்னும் பல செய்ய தூண்டுகிறது.’

Advertisment

ACTOR AND DIRCTOR PARTHIBAN TWEET

பார்த்திபனின் இந்த ட்வீட்டுக்கு இப்படி பதிலளித்திருக்கிறார் ஒரு ரசிகர் 30 வருடங்களுக்கு முன் “இதெல்லாம் திரையில் ரசிக்கும் ஹீரோ மூஞ்சியா?” என்று புதியபாதை வெளிவந்தபோதே, படம் வெற்றி பெற்றாலும் விமர்சனத்துக்கும் ஆளாக நேர்ந்தது. அட, அதே மூஞ்சி கொஞ்சம் கிழடு தட்டியும்கூட, ஒத்த செருப்பின் மொத்தத் திரையையும் ஆக்கிரமித்திருக்கிறது. ஆனாலும், அந்த மூஞ்சும், அதன் புலம்பலும், இடையில் இடைவேளை விட்டாலும், ரெண்டு மணி நேரம் பார்க்கவும், கேட்கவும் வைத்திருக்கிறது. இதைக்காட்டிலும் அந்த மூஞ்சி வாழ்க்கையில் என்ன சாதித்துவிட முடியும்? அடே, பார்த்திபா! ஜெயிச்சுட்டடா! வரவு செலவு கணக்கை அப்புறம் பார்த்துக்கலாம். பார்த்திபனைப் போலவே இருக்கிறார்கள் அவருடைய ரசிகர்களும்!

Advertisment

Tweets ACTOR PARTHIBAN Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe