/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/63_32.jpg)
துணிவு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக லைகா தயாரிப்பில் ஒரு படம் நடிக்கவுள்ளார்அஜித். இப்படத்தை மகிழ் திருமேனி இயக்க இசையமைப்பாளராக அனிருத்தும் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா உள்ளிட்டோர் பணியாற்றவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், “லைகா நிறுவனம் தயாரிக்கும் தனது அடுத்த படத்துக்கு பிறகு அஜித் குமார் துவங்க இருக்கும் 2 ஆவது சுற்று உலக மோட்டார் சைக்கிள் சுற்று பயணத்துக்கு ‘பரஸ்பர மரியாதை பயணம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது” எனக்கூறி இருந்தார்.
கடந்த டிசம்பர் மாதம் உலகச் சுற்றுப் பயணத்தின் முதல் சுற்றை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பயணம் செய்து முடித்துள்ளதாகத் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.முன்னதாக இந்த சுற்றுப் பயணம் 7 கண்டங்கள், 60 நாடுகள் என மொத்தம் 18 மாதங்கள் ஆகும் எனவும் இது அஜித்தின் நீண்ட நாள் கனவு எனவும் தகவல்கள் வெளியானது நினைவுகூறத்தக்கது.
இந்நிலையில், நடிகர் அஜித் குமாரின் தந்தை மணிஎன்கிற சுப்ரமணியன் காலமானார். அவருக்கு வயது 84. கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார். சென்னை பெசண்ட் நகர்மயானத்தில் இன்று காலை 10 மணிக்கு உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)