Advertisment

அவன் கூட போக சொல்லாதீங்க... நீதிமன்றத்தில் கதறிய நடிகை... அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்!

கடந்த 2016ம் ஆண்டு தமிழில் வெளியான படம் பட்டதாரி இந்தப் படத்தில் இணைந்து நடித்த அபி சரவணன் மற்றும் அதிதி மேனன். இருவருக்கும் படப்பிடிப்பின் போது காதல் மலர்ந்துள்ளது. பின்பு இருவரும் திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் சில மாதங்களிலேயே அபி சரவணனும், அதிதி மேனன் ஆகிய இருவரும் பிரிந்து விட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் விவாகரத்து கேட்டு அதிதி மேனன் குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அப்போது அதிதி மேனனை யாரோ மூளை சலவை செய்துள்ளனர் என்று அபி சரவணன் குற்றச்சாட்டு கூறினார். இந்த வழக்கை விசைத்த நீதிபதி அதிதி மேனனை குடும்ப நல கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கு நடிகை அதிதி மேனன் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

Advertisment

actor

actor

actress

இந்த நிலையில் குடும்ப நல கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள மறுத்த அதிதி மேனனை மதுரை நீதிமன்றம் கடுமையாக கண்டித்து கலந்து கொள்ள வைத்துள்ளது. மேலும் இந்த விவாகரத்து வழக்கில் தொடர்ந்து ஆஜராக மறுத்து வந்தார் அதிதிமேனன். இதனால் அவருக்கு நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக கைது செய்யப்படுவார் என நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதனையடுத்து அபி சரவணனும், அதிதி மேனனும் மதுரை குடும்பநல நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது இருவரையும் குடும்ப நல கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள நீதிபதி கூறியுள்ளார். அதற்கு நடிகை அதிதி மேனன் என்னை அவன் கூட போகச் சொல்லாதீங்க என்று கூறியுள்ளதாக சொல்லபடுகிறது. மேலும் குடும்ப நல கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள முடியாது என்றும் அதிதி மேனன் கூறியதாக சொல்லப்படுகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி கவுன்சிலிங்கில் கட்டயாம் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறியதாக சொல்லப்படுகிறது.

Advertisment

actor Actress family highcourt issues ordered
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe