Advertisment

கிராமசபைக் கூட்டத்தில் அரசியல் ஆதாயம் தேடுவதா? - தமிழக அரசு எச்சரிக்கை!

grama sabha

கிராமசபைக் கூட்டங்கள் நடத்த மாவட்ட ஆட்சியர்கள் அனுமதிக்கக்கூடாது எனத் தமிழக ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில்,கிராமசபை என்ற பெயரில், சில அரசியல் கட்சிகள் அரசியல் சார்ந்த கூட்டங்களை நடத்தி வருகின்றன. அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் நடத்தப்படும் கிராமசபைக் கூட்டத்திற்குஅனுமதி தரக்கூடாது.இது ஊராட்சிகள் சட்ட விதிமுறைகளுக்கு முரணானது மட்டுமின்றி கொச்சைப்படுத்தும் வகையிலும்உள்ளது.

Advertisment

கிராமசபைக் கூட்டங்கள் ஊரகப் பகுதி மக்களின் குறைகளைக் களைந்து கிராம முன்னேற்றம் காண வழிவகுக்கிறது.ஆனால், கிராமசபை என்ற பெயரைத் தவறாகப் பயன்படுத்தி அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்தினால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.கிராமசபைக் கூட்டம்நடத்தஊராட்சித் தலைவருக்கு மட்டுமேஅதிகாரம்உள்ளது. தனி நபரோ, அரசியல் கட்சிகளோ கிராமசபைக் கூட்டத்தை நடத்துவது சட்டத்திற்கு எதிரானது எனத் தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Advertisment

tn gvot Grama Sabha
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe