Advertisment

“பருவமழை குறித்து தவறான கருத்துகளை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்”- ஐஜி பாலகிருஷ்ணன் பேட்டி!

Action will be taken against those who spread misconceptions about monsoon

Advertisment

நாகை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் நேற்று (09.11.2021) நாகை சென்றடைந்தார். தொடர்ந்து துணை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த அவர், அங்கு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் மழை உள்ளிட்ட பேரிடரின்போது எந்தெந்த இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற கடந்தகால புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டது.

அதன்படி அந்தந்தப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மத்திய மண்டலம் முழுவதும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 10,000 காவலர்கள் அடங்கிய பேரிடர் மீட்புக் குழுவினர் தயாராக உள்ளனர். பருவமழை குறித்த தவறான தகவல்களை சமூக வலைதளங்களில்பரப்புபவர்கள் மாவட்ட சைபர் க்ரைம் மூலம் கண்காணிக்கப்படுகின்றனர். இவ்வாறு தவறான தகவல்களைப் பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

ig monsoon nagai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe