ADVERTISEMENT

திரையரங்குகளில் 100 சதவிகித அனுமதிக்கு பதிலாக தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு!!  

06:32 PM Jan 08, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திரையரங்கில் 100 சதவிகிதப் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை திரையுலகினரால் தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது. இதனைப் பரிசீலனை செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இதற்கான அனுமதியை வழங்கி அரசாணை ஒன்றைக் கடந்த 5-ஆம் தேதி பிறப்பித்தார். இது, 'கரோனா பரவுவதற்கான ஹாட்ஸ்பாட்டாக மாறிவிடும்' எனவும், 'அரசின் இந்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது' எனவும் மருத்துவர்கள் சார்பில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

அடுத்த நாளான 6-ஆம் தேதியே, தமிழக தலைமைச் செயலாளருக்கு மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியிருந்தார். அதில், "கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மத்திய அரசு கடந்த மாதம் 28-ஆம் தேதி வெளியிட்ட வழிமுறைகளைப் பின்பற்றி நடக்கவேண்டும். உள்துறை அமைச்சகத்தின் கரோனா நடவடிக்கைகளை நீர்த்துப்போகும் அளவில் நடவடிக்கைகள் இருக்கக் கூடாது. திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற வழிகாட்டுதலையே பின்பற்றவேண்டும். திரையரங்குகளில் 100 சதவிகித இருக்கைகளை அனுமதித்த உத்தரவைத் திரும்பப்பெற வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது. அதேபோல் இது தொடர்பான வழக்கில் ஜனவரி 11-ஆம் தேதி வரை திரையரங்குகள் 50% இருக்கைகளுடன்தான் இயங்கவேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், திரையரங்குகளில் 100 சதவிகித பார்வையாளர்கள் அனுமதிக்குப் பதிலாக கூடுதல் காட்சிகளைத் திரையிட்டுக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசின் அறிவுரையைக் கருத்தில்கொண்டும், உயர்நீதிமன்றத் தீர்ப்பைக் கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT