இந்தியாவில் திருத்தப்பட்ட மூன்று முக்கிய குற்றவியல் சட்டங்கள் வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதி வர உள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக காவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று (20-05-24) வேலூர் மாவட்டம்காட்பாடியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட காட்பாடி காவல் நிலைய தலைமை காவலர் கோபி, மது அருந்திவிட்டு மது போதையில் வகுப்பில் கலந்து கொண்டுள்ளார். போதையில் வகுப்பில் அமர்ந்தபடி வகுப்பை கவனிக்காமல் தள்ளாடி, உளறிக்கொண்டு இருந்துள்ளார். இது தொடர்பாக பெண் காவல் ஆய்வாளர் பாரதி எச்சரித்துள்ளார்.
அதற்குத்தலைமைக் காவலர் கோபி, ‘நான் ஒழுங்கா பாடத்தைகவனிச்சிட்டுதான்இருக்கேன், நீ நடத்து’ என ஒருமையில் முதலில் பேசி உள்ளார். பாடம் தொடர்பாக எழுப்பிய கேள்விக்குமுறையாகப்பதில் அளிக்காமல்அநாகரிகமாகப்பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர், ‘நீஇன்ஸ்பெக்டர்னாபெரிய இதுவா, நீ கேள்வி கேட்டால் நான் பதில்சொல்லனுமா, ஒழுங்கா பேசு’ என அனைவர் முன்னிலையில் தொடர்ந்துஅநாகரிகமாகப்பேசி உள்ளார்.
இது தொடர்பான புகார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்மணிவண்ணனுக்குச்சென்றது. இது தொடர்பாக முதற்கட்ட விசாரணையில், அவர் பேசியது உண்மை எனத்தெரிய வந்தது. மதுபோதையில்பணியில் இருந்ததோடுமட்டுமல்லாமல், உயர் அதிகாரியை மிகமோசமாகப்பேசியதால்தலைமைக்காவலர்கோபியைத்தற்காலிக பணியிடை நீக்கம் செய்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.சட்டத்தைக்காக்க வேண்டிய காவல் துறையைச் சார்ந்தவர்களே மது போதையில் பணிக்குவந்திருப்பதும், குற்ற வழக்குகள் சம்பந்தமான பாடம் கற்பிக்கும் இடத்திலேயே மது போதையில் வந்திருப்பது காவல்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.