Advertisment

அதிரடி கிளப்பும் எஸ்.ஐ. - கஞ்சா வியாபரிகள், கிரிமினல் பேர்வழிகள் ஓட்டம்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி காவல் நிலைய எஸ்.ஐ. அகிலன் சில தினங்களுக்கு முன்பு பணி மாறுதலில் இங்கு வந்து சேர்ந்தார். திட்டக்குடி காவல்நிலையத்தில் பணிக்கு சேர்ந்த நாள் முதல் கஞ்சா வியாபரிகள் மற்றும் தொடர் கிரிமினல் பேர்வழிகளை கையும் களவுமாக பிடித்து வழக்கு போட்டு சிறைக்கு அனுப்பி வருகிறார். அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்த திட்டக்குடி பாலாஜி, மணிகண்டன் ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்து வழக்கு போட்டு சிறைக்கு அனுப்பியுள்ளார்.

Advertisment

SI

திட்டக்குடி காவல் நிலைய இன்ஸ்பெக்டராக உள்ள ஸ்ரீபிரியா, அகிலனின் அதிரடி பணிக்கு மிகவும் உறுதுணையாக இருந்து வருகிறார் என்று காவல்நிலைய போலுசார் தெரிவிக்கின்றனர். அகிலன் இதற்கு முன்பு எ.வா.கோட்டை, கருவேப்பிலங்குரிச்சி, சிதம்பரம், திருநாவலூர், திருவெண்ணைநல்லூர், மணலூர்பேட்டை, விக்கிரவாண்டி, எடக்கல் ஆகிய காவல் நிலையங்களில் சிறப்பாக பணியாற்றி அதிகாரிகளிடமும் பொதுமக்களிடமும் பாராட்டை பெற்றவர்.

Tittakudi sub Inspector SI Action
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe