ADVERTISEMENT

“பழையபடி நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்”-தங்க சண்முக சுந்தரம்!

11:58 AM Jan 28, 2022 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

காவிரி டெல்டா, திருமானூர் தாபழூர் பகுதிகளில் விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது. இதனை தமிழக முதல்வர் தலையிட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உடனடியாக ஆன்லைன் பதிவு கட்டாயம் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மேலும் பழைய நடைமுறையே செயலாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “2022ஆம் ஆண்டிற்கான நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்ட நிலையில் பல்வேறு குளறுபடிகள், காவிரி டெல்டா பகுதியான திருமானூர் தா பழூர் விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதில் பல்வேறு குளறுபடிகள் நீடிக்கிறது. வெளிச்சந்தையில் விவசாயிகள் 63 கிலோ சன்னரகத்திற்கு 1050 விற்பனை செய்து வருகிறார்கள். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 40 கிலோ சன்னகரத்திற்கு 836 ரூபாய் அரசு அறிவித்தாலும், கிராம நிர்வாக அலுவலரிடம் அடங்கல் பெற்று ஆன்லைன் பதிவு செய்து பிறகு மீண்டும் கிராம நிர்வாக அலுவலரின் அனுமதி பெற்று நெல் கொள்முதல் நிலையத்தில் அனுமதி கடிதம் கிடைக்கப்பெற்றால் நெல்லை விற்பனை செய்யும் நிலை உள்ளது.

இது வெளிச்சந்தை வியாபாரிகளுக்கும் இடைத்தரகர்களுக்கும் அடிமாட்டு விலைக்கு நெல்லை விற்பனை செய்யும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுகின்றனர். இதில் விவசாயிகள் மட்டுமல்லாமல் குத்தகை சாகுபடி செய்யும் சிறு குறு விவசாயிகளும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறார்கள். உதாரணத்திற்கு ஒரு கிராமத்தில் அதிகபட்சமாக 1000 ஏக்கர் நிலம் இருக்கும். இங்கு வசிக்கும் கூலித்தொழிலாளர்கள் மேற்படி கிராமத்தில் வசிக்கும் விவசாயிகளிடம் குத்தகை சாகுபடி என்ற பெயரில் ஏக்கருக்கு 15 ஆயிரம் கொடுத்து சாகுபடி செய்து வருகிறார்கள். அந்த உற்பத்தி செய்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய வேண்டுமென்றால் கிராம நிர்வாக அலுவலர் மூலமாக அடங்கல் தேவைப்படுகிறது.

அந்த அடங்கல் பெற வேண்டுமென்றால் குத்தகை சாகுபடி செய்த விவசாயிகள் அவர் பெயரிலேயே நேரடியாக பயிர் காப்பீடு செய்திருக்க வேண்டும். அங்கு வசிக்கும் விவசாயிகள் பணத்தை மட்டும் பெற்றுக்கொண்டு அவர் பெயரிலேயே பயிர் காப்பீடு செய்துள்ளார்கள். இந்த நெல்லை விற்பனை செய்வதற்கு கிராம நிர்வாக அலுவலரிடம் சென்றால் அவர் பயிர் காப்பீடு செய்தவர் பெயரில் தான் நாங்கள் அடங்கல் கொடுக்க முடியும் என்று சொல்கிறார்கள். பயிர் செய்த விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய முடியாமல், பெரும் நஷ்டத்தோடு வெளிச்சந்தையில் விற்பனை செய்து வருகிறார்கள்.

இந்த நிலை காவிரி டெல்டா பகுதியான திருமானூர் தாபழூர் முழுவதும் இந்நிலை நீடிக்கிறது . எனவே எந்த நிபந்தனையுமின்றி கடந்த ஆண்டு போல அடங்களை மட்டும் பெற்று, நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் நேரடியாக நெல்லை விற்பனை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும். இது உடனடியாக நடைமுறைக்கு வரவேண்டும். இல்லையென்றால் சொன்னால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைவதோடு, விலை வீழ்ச்சிக்கும் இது வழிவகுக்கும். எனவே தமிழக முதல்வர் கவனத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என அனைத்து விவசாயிகள் சார்பில் அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT