Advertisment

''ஆக்கிரமித்திருந்தால் அகற்ற நடவடிக்கை''-அமைச்சர் கே.என்.நேரு தகவல்!

'' Action to remove it if it is occupied '' - Minister KN Nehru information!

சென்னையில் உள்ள 420 விளையாட்டு மைதானங்கள் புதுப்பிக்கப்படும் என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

Advertisment

இன்று (25.08.2021) சென்னை கோடம்பாக்கம் ட்ரஸ்ட்புரம் முதல் பிரதான சாலையில் உள்ள விளையாட்டு மைதானம் திறப்பு விழா நடைபெற்றது. ரூபாய் 50 லட்சம் மதிப்பில் விளையாட்டு மைதானம் புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

Advertisment

இந்த நிகழ்வில் அவர் பேசியதாவது, ''சென்னையில் ஏரி, குளங்களில் குப்பைகளைக் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுப்பணித்துறையின் கீழ் வரும் அனைத்து ஏரிகளும், நீர் நிலைகளும் முறையாக சீரமைக்கப்படும். சென்னையில் உள்ள 420 விளையாட்டு மைதானங்கள், சாலையோர பூங்காக்கள் மேம்படுத்தப்படும். நீர்நிலைகளை பெரிய நிறுவனங்கள் ஆக்கிரமித்திருந்தால் அதையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்'' எனத் தெரிவித்துள்ளார்.

kn nehru
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe