சென்னையில் தெருக்களில் சாதிப் பெயர்களை நீக்கும் பணிகளை சென்னை மாநகராட்சித் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மாநகராட்சியில் 10,000- க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. தெருக்களின் பெயர் பலகைகளில் சிங்காரசென்னை 2.0 திட்டத்தின் கீழ் மாற்றியமைக்கும் பணிகளில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. வார்டு, பகுதி, மண்டலம், அஞ்சல், குறியீட்டு எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இருக்கும் வகையில் பெயர் பலகை அமைக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, தெருக்களில் சாதி பெயர்கள் நீக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 13வது மண்டலம், 171வது வார்டில் அப்போவோ கிராமணி 2வது தெரு என இருந்த சாலையின் பெயரில் இருந்து கிராமணியை நீக்கி அப்பாவு (கி) தெரு என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.