mm

திருச்சி நீதிமன்றம் அருகே பொதுப்பணித்துறை கட்டிட வளாகத்தில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசனத்துறை அலுவலகம் செயல்பட்டுவருகிறது. இதில்,உதவிபொறியாளராககந்தசாமி மற்றும் சிறப்பு பொறியாளராக மணிமோகன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். சமீபகாலமாக தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப்பாசன துறையில் பயனாளர்களிடம் லஞ்சம் பெறப்படுவதாக அதிகளவில் புகார்கள், லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வந்தன.

Advertisment

இந்நிலையில் இன்று திருச்சி லஞ்ச ஒழிப்பு காவல்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் சக்திவேல் மற்றும் போலீசார்அதிரடியாக ஏரி மற்றும் ஆற்றுப் பாசனத்துறை அலுவலகத்திற்குள் நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது, ஊழியர்கள் அனைவரையும்அலுவலகத்தினுள்ளேஇருக்க உத்தரவிட்டனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில்,உதவிபொறியாளர் கந்தசாமி மற்றும்சிறப்புபொறியாளர்மணிமோகன்ஆகியோர் ஒப்பந்ததாரர்கள் மூலம் பெறப்பட்ட கணக்கில் காட்டப்படாத ரூ.31 லட்சத்தை பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணையில் நடத்தி வருகின்றனர். மேலும் திருவானைக்காவல், ராஜா காலனியில் உள்ள அவர்களது இல்லங்களிலும் சோதனையானது நடைபெற்று வருகிறது.திருச்சி நீதிமன்றம் அருகே லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment