ADVERTISEMENT

'மின்தடை குறித்து தெரிவித்தால் நடவடிக்கை' - அமைச்சர் செந்தில்பாலாஜி

08:15 AM Jun 08, 2021 | kalaimohan

ADVERTISEMENT


தமிழ்நாட்டில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜூன் 14 வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. இந்தச் சூழலில், மின் கட்டணங்களை நுகர்வோரே கணக்கிட்டுச் செலுத்தலாம், மின் கட்டணம் செலுத்தும் கடைசி தேதி நீட்டிப்பு போன்ற பல அறிவிப்புகளை மின்சாரத்துறை வெளியிட்டுவருகிறது.
இந்நிலையில், கடந்த 2ஆம் தேதி தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், 'ஊரடங்கு காலத்தில் மின்தடை ஏற்படுவதாகப் புகார்கள் வந்த நிலையில், ஊரடங்கு காலத்தில் மேற்கொள்ளப்பட்டவரும் மின் பராமரிப்பு பணிகள் ஒத்திவைக்கப்படுகிறது.

ADVERTISEMENT

ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருந்து பணியாற்றுவோர் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகத் தொடர்ச்சியாக மின் விநியோகம் இருக்கும். அதேபோல் ஆன்லைன் தேர்வுகள் நடைபெறுவதாலும் ஊரடங்கு முடியும்வரை மின்தடை இருக்காது. கடந்த ஆறு மாதங்களாகப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாத நிலையிலும், ஊரடங்கு முடியும் வரை பராமரிப்பு பணிகளுக்கான மின்தடை ஏற்படாதவாறு அப்பணிகள் ஒத்திவைக்கப்படும். அதேவேளையில் தவிர்க்க முடியாத மின் பராமரிப்பு பணிகள் மட்டுமே போர்க்கால அடிப்படையில் செய்யப்படும்' எனவும் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், மின் தடை குறித்து தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். எந்தெந்த இடங்களில் எப்போது மின்தடை ஏற்பட்டது என தெரிவித்தால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். மின்தடை இருக்கக்கூடாது என்ற முதல்வரின் அறிவுறுத்தலின்படி மின்வாரியம் செயல்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT