அரசு ஊழியர்கள் முதல் மனைவி அல்லது கணவன் இருக்கும்போதே இரண்டாவது திருமணம் செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் மனிதவள மேலாண்மைத்துறை செயலாளர் மைதிலி ராஜேந்திரன், அரசுத்துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், உயர்நீதிமன்ற பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசு பணியாளர்கள் சிலரின் இறப்பிற்கு பிறகே அவர்கள் இருதார திருமணம் செய்தது தெரியவந்ததாகவும், அதன் காரணமாக அப்பணியாளர்களின் வாழ்க்கைத்துணைக்கு ஓய்வூதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், அரசு ஊழியர்கள் முதல் மனைவி அல்லது கணவன் இருக்கும்போதே இரண்டாவது திருமணம் செய்தால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை தவிர, குற்றவியல் வழக்குப் பதியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.