சமீப காலமாக குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகாித்து இருக்கும் நிலையில் அதை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் இருந்தும் அதைபற்றி கவலைப்படாமல் அந்த குற்றச்செயல்களில் ஈடுபடுவோர்கள் எண்ணிக்கையும் அதிகாித்துள்ளது.

Advertisment

Action to expedite proceedings in Special Court

இந்நிலையில் தமிழகத்தில் அந்த குற்றச்செயல்களில் ஈடுபடுவோ் மீது போடப்படும் போக்சோ வழக்குகள் விசாரணையை விரைந்து முடிப்பதற்காக மாவட்டம் தோறும் போக்சோ நீதிமன்றங்கள் திறக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி இன்று தமிழகத்தில் 14 ஆவது போக்சோ நீதிமன்றம் இன்று நாகா்கோவில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் திறக்கப்பட்டது.

நீதிமன்றத்தை திறந்து வைத்து பேசிய மாவட்ட நீதிபதி அருள்முருகன்... போக்சோ வழக்குகளை விரைந்து முடிக்க நாடு முமுவதும் போக்சோ நீதிமன்றங்கள் திறக்கபட்டு வருகின்றன. தற்போது தமிழகத்தில் 100 போக்சோ வழக்குகளுக்கு மேல் பதிவாகியுள்ள மாவட்டங்களில் நீதிமன்றங்கள் திறக்கப்பட்டுள்ளன.

Advertisment

இதில் குமாி மாவட்டத்தில் 204 போக்சோ வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் 450 வழக்குகள் காவல்நிலையங்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட நிலையில் உள்ளன. இந்த வழக்குகள் எல்லாம் விரைந்து முடிக்கப்படும் என்றாா்.