கடந்த 23.2 .2019 அன்று காலை கடலூர் முதுநகர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான காவலர்கள் மதுகடத்தல் சம்பந்தமாக கண்ணாரப்பேட்டை ரயில்வேகேட் அருகில் கண்காணித்துக் கொண்டிருந்தபோது பதிவு எண் இல்லாத ஆட்டோவில் குருவிநத்தத்தை சேர்ந்த கலைமணி (30) என்பவர் ஆட்டோவில் 2 பாலிதீன் பைகளில் சுமார் 120 லிட்டர் சாராயம் கடத்தி வந்துள்ளார். ஆட்டோவுடன் அவரை மடக்கிப் பிடித்த போலீசார் விசாரணை செய்ததில் புதுச்சேரி மாநிலம் அரங்கனூர் சாராய கடை உரிமையாளர் சின்னஆராய்ச்சிகுப்பம்நாகராஜன் (55)
என்பவரின் சாராய கடையில் சாராயம் வாங்கி கடத்தி வந்ததாக கலைமணி கூறினார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/asdf.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அதன் பேரில் வழக்கு பதிவு செய்து கலைமணியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் சாராய கடத்தலுக்கு உடந்தையாக இருந்த சாராயக்கடை உரிமையாளர் நாகராஜன் என்பவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள். தப்பி ஓடிய ஆட்டோ ஓட்டுநர் பிரபாகரனை தேடி வருகிறார்கள்.
அதேசமயம் கடலூர் மாவட்டத்தில் மதுகடத்தலில் ஈடுபடும்போது பிடிபடும் குற்றவாளிகளிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டு அதன் அடிப்படையில் எந்த கடையில் சாராயம் வாங்கி கடத்தி வந்தார்களோ அந்த கடை உரிமையாளர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.
மேலும் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள சாராய கடத்தல் வழக்குகளில்மேல்விசாரணை மேற்கொண்டு சாராய கடத்தலுக்கு உதவியாக இருந்த உரிமையாளர்கள் மீது குற்றப்பத்திரிகையில் அவர்கள் பெயர் சேர்க்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)