சென்னை ஆழ்வார் திருநகரில் வெங்கடேஷ்வரா மெட்ரிக் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வந்த தீட்சித் என்ற 8 வயது மாணவர் கடந்த மார்ச் 28ஆம் தேதி பள்ளி பேருந்து மோதி பள்ளி வளாகத்திலேயே பலியானார். பள்ளியின் பேருந்து ஓட்டுநர் பேருந்தை பின்னோக்கி நகர்த்த முயன்ற போது பின்னால் நின்றுகொண்டிருந்த மாணவன் தீட்சித் பேருந்தின் சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக பேருந்து ஓட்டுநர், பள்ளியின் தாளாளர், தலைமையாசிரியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், பள்ளி முதல்வர் மற்றும் போக்குவரத்து உறுப்பினர் குழுவில் இடம்பெற்றிருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், பள்ளி முதல்வர், போக்குவரத்து குழு உறுப்பினர் இருவர் என மூவரை பணி நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.