
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவை முன்னிட்டு ஏப்ரல்- 6 ஆம் தேதி தினக்கூலி, தற்காலிகம், ஒப்பந்தம் உட்பட அனைத்துத் தொழிலாளர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை தர வேண்டும் எனத்தமிழக அரசு கடந்த மாதம் தேர்தல் அறிவித்த உடனே அரசாணை வெளியிட்டது.
இந்நிலையில், நாளை விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக புகார் அளிக்க தொலைப்பேசி எண்ணையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Follow Us