The act of the husband leaving the two children; A shocked family

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த தடுப்பதி, கருமாண்டிசெல்லிபாளையம், சமாதானபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. 32 வயதான மூர்த்திக்கு 32 வயதில் பரிமளா என்ற மனைவிஉள்ளார்.இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் கூலி வேலைக்கு சென்று வந்தனர். மூர்த்தி அடிக்கடி குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். குடிப்பழக்கம் காரணமாக மூர்த்திக்கு வயிற்று வலி இருந்து வந்துள்ளது. வயிற்று வலி வரும்போதெல்லாம் தான் இறந்துவிடப் போவதாக மூர்த்தி கூறி வந்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் வயிற்று வலி பொறுக்க முடியாமல் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மூர்த்தி தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே மூர்த்தி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பெருந்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வயிற்று வலி காரணமாக மூர்த்தி தற்கொலை செய்து கொண்டது அவரது குடும்பத்தினரையும் அப்பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisment