An acidic soft drink for a sixth-grader; Fellow student absconding

Advertisment

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் கடந்த சில தினங்கள் முன் விஷம் கலந்த குளிர்பானத்தை தனது மகள் உடன் படிக்கும் மாணவனுக்கு தாய் கொடுத்தார். இதனால் அந்த மாணவர் உயிருக்கு போராடி உயிரிழந்தார். தற்போது கன்னியாகுமரியிலும் மாணவர் ஒருவர் உடன் படிக்கும் மாணவனுக்கு அமிலம் கலந்த குளிர்பானம் கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மெதுகும்பல் அருகே ஆறாம் வகுப்பு மாணவனுக்கு மற்றொரு மாணவன் அமிலம் கலந்த குளிர்பானத்தை கொடுத்ததால் இரு சிறுநீரகமும் செயலிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மெதுகும்பல் அருகே அதங்கோடு பகுதியை சேர்ந்த மாணவர் பள்ளியில் தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு செல்வதற்காகநின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த உடன் படிக்கும் மாணவன் அவருக்கு குளிர்பானத்தை கொடுத்துள்ளார். அதனை குடித்து விட்டு வீட்டிற்கு சென்ற மாணவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே பெற்றோர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Advertisment

மருத்துவர்கள் பரிசோதித்ததில் அமிலம் கலந்த குளிர்பானம் குடித்ததால் இரு சிறுநீரகமும் செயல் இழந்தது தெரிய வந்தது. இது குறித்து சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் அமிலம் கலந்த குளிபானத்தை கொடுத்த மாணவரை தேடி வருகின்றனர். தற்போது மிகத்தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிறுவன் சிகிச்சை பெற்று வருகிறார்.