Advertisment

புதுமாப்பிள்ளை முகத்தில் ஆசிட் வீச்சு - ஆம்பூரில் பரபரப்பு!

Acid attack on youth face

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஆயிஷா-பி நகர் பகுதியில் காலணி தொழிற்சாலை உள்ளது. இதில் தொழிலாளியாக பணியாற்றுபவர் 35 வயதான ஷமில் அஹமத். ஆகஸ்ட் 17ஆம் தேதி இரவு கம்பெனிக்கு வெளியே இவர் மீது ஆசிட் வீசப்பட்டதில்அவரது முகம் பாதிக்கப்பட்டுள்ளது. வலியால் துடித்தவரை சக ஊழியர்கள் மீட்டுக்கொண்டுவந்து ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

Advertisment

முதற்கட்ட சிகிச்சை முடிந்த பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆகஸ்ட் 21ஆம் தேதி ஷமில் அஹமதுக்கு திருமணம் நடக்கவிருந்த நிலையில், அவர் மீது ஆசிட் வீசப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து புகார் அளித்ததன் அடிப்படையில், ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவுசெய்து ஆசிட் வீசிய மர்ம நபர்களைத் தேடிவருகின்றனர். அதே நேரத்தில் ஆசிட் வீசும் அளவுக்கு என்ன பிரச்சனை? சொந்த தகராறா? காதல் பிரச்சனையா? நண்பர்களுக்குள் மோதலா என பல்வேறு கோணங்களில் ஷமில் அஹமத் உட்பட அவரது குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்திவருகின்றனர்.

Advertisment

incident TIRUPATTUR
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe