livestock

Advertisment

கால்நடைகளின் மீது அமிலவீச்சு நடத்திய சம்பவம் மேட்டுப்பாளையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச்சேர்ந்தவர், ராஜ்குமார். இவரிடம் 40 எருமை மாடுகள் உள்ளன. கால்நடைகளை கவனித்த அதன் உரிமையாளர் ராஜ்குமார், கால்நடைகளின் தோல்கள் சுருங்கியும் கால்நடைகளின் மேல் காயங்களும் காணப்பட்டதால் அருகில் உள்ள கால்நடை மருத்துவரிடம் சென்றுள்ளார். மருத்துவர் சோதனை செய்ததில் கால்நடைகளின் மீது நான்கு நாட்களுக்கு முன் அமிலவீச்சு நடந்திருக்கலாம் என்பது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.