
திருவள்ளூரில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த முதிய தம்பதிகள் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மேரட்டூரை சேர்ந்தவர்கள் மணி-கலாவதி தம்பதி. இவர்கள் நேற்று இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பொழுது நள்ளிரவில் ஜன்னல் வழியாக மர்ம நபர்கள் சிலர் ஆசிட் விசி உள்ளனர். முதல் முறை வீசிய பொழுது சரியாக படாத நிலையில் இரண்டாவது முறை வீசியுள்ளனர். அப்பொழுது முதியவர் மணியின் உடலில் ஆசிட் பட்டது. அலறி அடித்துக் கொண்டு மின்விளக்குகளை ஆன் செய்து பார்த்த பொழுது நபர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், காயமடைந்த முதியவர் மணியை மீட்டு மீஞ்சூர் காவல் துறையினர் சிகிச்சைக்கு அனுப்பி வைத்ததோடு இந்த ஆசிட் வீச்சுசம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)