Achievement Incentive for Govt Bus Employees- Tamil Nadu Govt

அரசு பேருந்து ஊழியர்களுக்கான சாதனை ஊக்கத்தொகை தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Advertisment

தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில், 200 நாட்கள் மற்றும் அதற்கு மேலாக பணிபுரிந்த போக்குவரத்து ஊழியர்களுக்கு தலா ரூபாய் 625 வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 151 நாட்கள் மற்றும் அதற்கு மேலான நாட்கள் (200 நாட்களுக்கு குறைவாக) பணிபுரிந்த ஊழியர்களுக்கு தலா ரூபாய் 195 ரூபாய் வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது. 91 மற்றும் முதல் 150 நாட்கள்வரை பணிபுரிந்த ஊழியர்களுக்கு தலா 85 ரூபாய் வழங்க உத்தரவிட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisment

ஒழுங்கு நடவடிக்கை தொடரப்பட்டுள்ளவர்கள் சாதனை ஊக்கத்தொகை பெற தகுதியற்றவர்கள் எனவும் தமிழக போக்குவரத்து துறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சாதனை ஊக்கத் தொகையை பெற போக்குவரத்து கழகத்தில் ஆண்டின் கடைசி நாளில் ஊழியர் பணியில் இருந்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் தமிழக போக்குவரத்து தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாதநிலையில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை கையில் எடுத்தனர். ஆனால் இதுதொடர்பான வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவுபடியும், மக்களுக்கு பொங்கல் பண்டிகை சமயத்தில் இடையூறு ஏற்படக்கூடாது என்ற வகையிலும் ஜனவரி 19ஆம் தேதி வரை தற்காலிகமாக வேலை நிறுத்தத்தை போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் திரும்பப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Advertisment