தப்பித்த குற்றவாளி; 9 வருடங்கள் கழித்து திருச்சி விமானநிலையத்தில் கைது! 

accuser Arrested at Trichy Airport after 9 years!

சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு நேற்று இரவு ஒரு விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை விமானநிலைய அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது புதுக்கோட்டை கிழக்கு தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் மகேந்திரன் (42) என்பவரின் பாஸ்போர்ட்டை சோதனையிட்டனர். அப்போது அவர் தேடப்படும் குற்றவாளி என்பதும், கடந்த 2013ஆம் ஆண்டு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு தப்பிச் சென்றவர் என்பதும் தெரியவந்தது. உடனே அவரை அதிகாரிகள் திருச்சி ஏர்போர்ட் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

airport trichy
இதையும் படியுங்கள்
Subscribe