accused surrender in egmore court

சென்னை மடிப்பாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் செல்வம். 38 வயதாகும் இவர் பிப்ரவரி 1ஆம் தேதி இரவு 9.00 மணியளவில் ராஜாஜி நகர் பிரதான சாலையில் தனது ஆதரவாளர்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஆறு பேர் கொண்ட கும்பல், அவரை வெட்டி விட்டு இரு சக்கர வாகனங்களில் தப்பிச் சென்றது. உடன் இருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, கொலை வழக்கு பதிவு செய்த மடிப்பாக்கம் காவல்துறையினர் இக்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணையைத் தொடங்கினர்.

Advertisment

இவ்வழக்கு தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த அருண் என்பவர் எழும்பூர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன் சரணடைந்துள்ளார்.

Advertisment