Accumulation case against Rajendra Balaji ... Third judge appointed!

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் மூன்றாவது நீதிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜிசொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக மகேந்திரன் என்பவர் புகார் அளித்திருந்தார். அந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறை குற்றப்பிரிவுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Advertisment

இந்த வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால்வழக்கில் மூன்றாவது நீதிபதியாக நிர்மல்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், ராஜேந்திர பாலாஜி மீது சொத்துக்குவிப்பு வழக்குப் பதியக் கோரும்மகேந்திரனுடைய மனு 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.