சேகர் ரெட்டி வீட்டிலும்ரெய்டு நடத்தறாங்க, மந்திரி வீட்டிலேயும் ரெய்டு செய்யறாங்க...,மாவு தயாரிக்கும் தொழிலதிபர் வீட்டிலேயும் ரெய்டு... எல்லாம் ஒரு கணக்குக்கு தாம்பா.... என அரசியல்வாதிகள் நையாண்டி செய்கிறார்கள்.
ஈரோட்டில் மூலப்பட்டறை நால்ரோடுஅருகே ஆயில் மில், மாவு அரைக்கும்இயந்திரங்களை தயாரிக்கும் ஆண்டவர் லேத் ஒர்க்ஸ் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர்கள் சகோதர்களான சண்முகம், பாலசுப்பிரமணியம் ஆகிய இருவரும் தான். இந்த நிறுவனத்துக்கு சொந்தமான கிளைகள் அசோகபுரம் மற்றும் சோலார் ஆகிய இரண்டு இடங்களில் உள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
இதில் பல பேர் தொழிலாளர்களாக வேலை செய்து வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று காலை சேலத்தைசேர்ந்த வருமான வரித்துறைஅதிகாரிகள் 18 பேர் மூன்று குழுக்களாகப் பிரிந்து ஈரோடு மூலப்பட்டறையில் உள்ள நிறுவனம், சோலார், அசோகபுரம் ஆகிய இடங்களில் உள்ள அலுவலகங்களிலும் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.
நேற்று காலை வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் அந்த நிறுவனத்திற்கு உள்ளே சென்று கதவுகளை பூட்டி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது வெளியாட்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
மாலை 6 மணி வரை நீடித்த இந்த வருமான வரிசோதனையில் ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு என்றும், பல்வேறு நிறுவனங்களுக்கு உற்பத்தி செய்யப்பட்ட பொருள் விற்பனை செய்ததில் வரி ஏய்ப்பும்கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பு கூறுகிறது.
தொழில் செய்பவர்கள் வரி ஏய்ப்பு என்பது உண்மையாகவே இருக்கட்டும்.எந்தத் தொழிலும் செய்யாமல் கோடிக்கணக்கில் கட்டு கட்டாக பணம் வைத்திருந்ததை கையும் களவுமாக கண்டுபிடித்த வருமான வரித்துறை இறுதியில் இந்தப் பணத்திற்கு கணக்கு காட்டினால் போதும் என கொள்ளையர்களுக்கு ஆலோசனையும்,இங்கு உழைப்பவனை கணக்கு கேட்பதும்என்ன சொல்வது வெட்கப்பட வேண்டும் என வேதனையுடன் கூறுகிறார்கள் ஈரோட்டில் தொழில் புரியும் வணிகர்கள்.