Accidents involving government buses; One person was killed

Advertisment

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு அரசு பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது திருவண்ணாமலையிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் திருவாரூரைசேர்ந்த அசோக்குமார் என்ற நபர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். பேருந்தின் ஓட்டுநர் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் பலத்த காயத்துடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அரசு பேருந்துகள் மீது மோதிக்கொண்ட சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.