/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a71121.jpg)
ஐயப்பன் கோவிலுக்குச் சென்ற போது நேர்ந்த விபத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் திமுக வழக்கறிஞர் அணியின் துணை அமைப்பாளராக இருப்பவர் 35 வயதுடைய ராஜசேகர். இவர் தன்னுடைய நான்கு வயது மகன் கவின் உட்பட தனது நண்பர்களுடன் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து கொண்டு இரண்டு தினங்களுக்கு முன்பு கேரளா சபரிமலைக்கு காரில் சென்றனர். ஐயப்பனை தரிசனம் செய்துவிட்டு இன்று மே 15 ஆம் தேதி திருவண்ணாமலைக்கு திரும்பி வந்துக்கொண்டிருந்தனர். வரும் பொழுது மாலை 6 மணியளவில் பத்தனம்திட்டா மாவட்டம் துலாப்பல்லி கிராமப் பகுதியில் காரும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்தானது.
இதில் ராஜசேகரின் நான்கு வயதான கவின் என்ற குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பத்தனம்திட்டா போலீசார் குழந்தையின் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான புகாரை பெற்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)