Advertisment

பள்ளி மாணவி மீது தண்ணீர் லாரி மோதிய விபத்து-போக்குவரத்து காவல் துறையினருக்கு எச்சரிக்கை

Accident where a water truck hit a schoolgirl - warning to the traffic police

சென்னை பெரம்பூர் பகுதியில் குடிநீர் ஒப்பந்த லாரியானது மோதியதில் தாய் முன்னையே பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கும் நிலையில் போக்குவரத்து காவல் துறையினருக்கும் முக்கிய அறிவுறுத்தலை எச்சரிக்கையாக காவல் ஆணையர் அருண் வழங்கி உள்ளார்.

Advertisment

நேற்று சென்னை பெரம்பூர் பகுதியில் குடிநீர் வாரியத்திற்கான ஒப்பந்தலாரி ஒன்று மோதியதில் 10 வயது சிறுமி தாய் கண் முன்னேறி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் அந்தப் பகுதி போக்குவரத்து காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் பல்வேறு அறிவுறுத்தல்கள் போக்குவரத்துக்கு காவல் துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

பீக் ஹவர்ஸ் எனப்படும் காலை ஏழு மணியிலிருந்து 12 மணி வரை, மாலை 4 மணியிலிருந்து எட்டு மணி வரை பள்ளி மாணவர்கள் செல்லும் நேரங்களில் கனரக வாகனங்கள் பள்ளி இருக்கக்கூடிய பகுதிகளில் வரக்கூடாது. அதையும் மீறி வாகனங்கள் வருவது குறித்து தகவல் கிடைத்தாலே சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீதும், போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் விபத்து மூலம் உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகனங்களை குறைந்தது 100 நாட்களுக்கு ஒப்படைக்கக் கூடாது' என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Chennai perambur police traffic
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe