வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கம்மகிருஷ்ணபள்ளி பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவருக்கு நாட்றம்பள்ளி பகுதியில் பெண் பார்ப்பதற்காக பெருமாள் அவரது உறவினர்கள் சாமிநாதன் மற்றும் முருகன் ஆகிய 3 பேரும் ஒரு இருசக்கர வாகனத்தில் பெண் பார்த்துவிட்டு வாணியம்பாடி அருகே உள்ள செட்டியப்பணுர் அருகே வந்துகொண்டிருந்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/FB_IMG_1569155331197.jpg)
அப்போது பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி அதிவேகமாக சென்றுகொண்டிருந்த கார் இவர்களுடைய இருசக்கர வாகனம் மீது மோதியதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு பெருமாள் என்பவர் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் முருகன் மற்றும் சாமிநாதன் ஆகிய இருவரும் படுகாயங்களுடன் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இருவரில் சாமிநாதன் தலை மற்றும் கை கால்களில் பலத்த காயம் ஏற்பட்டதால் சாமிநாதன் என்பவரை வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/FB_IMG_1569155337409.jpg)
அங்கு சேர்க்கப்பட்ட பின்பும் சிகிச்சை பலனின்றி சாமிநாதன் வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தார் . இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த முருகன் என்பவர் தலைகவசம் அணிந்து இருந்ததால் சிறு காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து வாணியம்பாடி கிராமிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow Us