Advertisment

2 வயது குழந்தை கண் முன் துடிதுடித்து இறந்த தாய்-விபத்து ஏற்படுத்திய விபரீதம்.

வேலூர் மாவட்டம்,காட்பாடி அடுத்த செங்குட்டை ஜான்தெருவைச் சேர்ந்தவர் இராமலிங்கம். அவரது மனைவி 30 வயதான தரணி. இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இராமலிங்கம் தனது இருசக்கர வாகனத்தில் மனைவி மற்றும் தனது பெண் குழந்தையுடன் தனது இருசக்கர வாகனத்தில் காட்பாடி அடுத்த சித்தூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள பெட்ரோல் பங்கில் வண்டிக்கு பெட்ரோல் நிரப்ப வந்துள்ளார். அதே பெட்ரோல் பங்கில் டீசல் போட கனரக லோடு லாரி திரும்பும்போது தரணி வந்த இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியது. மோதியபோது தரணி கீழே விழுந்து லாரியின் டயரில் சிக்கிக்கொண்டார். அவர் சிக்கிக்கொண்டு அலறிய அலறல் அப்போது மக்களை அதிரவைத்தது.

Advertisment

​  accident

இந்த விபத்தை பார்த்து அப்பகுதியினர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் சர்விஸ்க்கும், போக்குவரத்து காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துவிட்டு தரணியை டயருக்கு அடியில் இருந்து மீட்கும் பணியில் ஈடுப்பட்டனர். அவரை மீட்க முடியாமல் தவித்தனர். சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் மற்றும் போலீசார் வர கால தாமதமானது. இதனால் சுமார் அரை மணி நேரம் துடிதுடித்தார். பொதுமக்கள் போராடியும் தரணியை காப்பாற்ற இயலவில்லை.

கணவன் மற்றும் குழந்தை கண் முன்னே லாரி மோதி தாய் துடிதுடித்து இறந்த சம்பவம் அவர்களை மட்டும்மல்ல பொதுமக்களையும் பதறவைத்தது. அதோடு,தரணி இறந்தபின்பே காட்பாடி போலீசார் சம்பவயிடத்துக்கு வந்துள்ளனர். வந்தவர்கள் இறந்த பரணியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.தகவல் கூறிய நேரத்துக்கு காவல்துறையோ, 108 ஆம்புலன்ஸ் குறித்த நேரத்தில் வந்திருந்தால் தரணியின் உயிரை காப்பாற்றி இருக்கலாம் என்பதே அந்த பகுதியில் இருந்த மக்களின் வேதனையான குரலாக இருந்தது

death mother accident
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe